சூர்யா 45 படத்தின் கதைக்களம் இதுதானா?... முதல் முறையாக அந்த வேடத்தில் நடிக்கும் சூர்யா!

vinoth

வெள்ளி, 7 மார்ச் 2025 (10:34 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடந்த முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் ஐதராபாத் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில்  இந்த படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யா, வழக்கறிஞர் மற்றும் அய்யனார் கடவுள் என இரு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் சிறு தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்