இதற்கிடையில் தற்போது சூர்யா குறுகிய காலப் படங்களாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர்தான் அவர் வாடிவாசல் படத்துக்குத் தேதிகள் ஒதுக்குவார் என்று சொல்லப்படுகிறது.