விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் தேதி!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:42 IST)
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்று 'கோடியில் ஒருவன்' என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனியின் 14வது திரைப்படமான 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தை இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது 
 
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்து வருகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் தேதி!
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கோடியில் ஒருவன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர் 
 
ஏப்ரல் மாதம் ஏற்கனவே ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்