விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அதிரடி அப்டேட்

வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:24 IST)
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அதிரடி அப்டேட்
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று, ‘கோடியில் ஒருவன். ஆனந்தகிருஷ்ணன் என்பவர் இயக்க்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடித்து வரும் இந்த படத்தில் மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது
 
இந்த படத்தின் மிகபெரிய அறிவிப்பு ஒன்று  நாளை பகல் 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நிவாஸ் பிரசன்னா இசையில் உதயகுமார் ஒளிப்பதிவில் விஜய் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்