ஜூனியர் என் டி ஆரின் முதல் பாலிவுட் படத்தில் இணைந்த நடிகை!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:33 IST)
RRR படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என் டி ஆரின் மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. அடுத்து இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.  ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இதையடுத்து ஜூனியர் என் டி ஆர் தன்னுடைய முதல் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஏற்கனவே ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட்டான வார் படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்த படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய அயன் முகர்ஜி இயக்க உள்ளார். முதல் பாகத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியாரா அத்வானி ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்