மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

vinoth

வியாழன், 3 ஜூலை 2025 (14:06 IST)
தென்னிந்திய சினிமாவில் நன்கறியப்பட்ட நடிகராக இருக்கிறார் உன்னி முகுந்தன். மலையாளப் படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான ‘மார்கோ’ திரைப்படம் கண்டனங்களைப் பெற்றாலும், வசூலை வாரிக் குவித்தது. தமிழிலும் அவர் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளார்.

மார்கோ படத்தின் வன்முறைக் காரணமாக அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த படத்துக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கவே செய்கிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ‘மார்கோ 2’ எப்போது வரும் என அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்து வருகின்றன. அப்படி ஒரு ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த உன்னி முகுந்தன் “அந்த படத்தை எடுக்கும் திட்டத்தை நான் கைவிட்டு விட்டேன். அந்த படத்தைச் சுற்றி நிறைய நெகட்டிவிட்டி உள்ளது. ” எனக் கூறியிருந்தார்.

ஆனால் ‘மார்கோ 2’ கண்டிப்பாக வரவேண்டும் என ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்குப் பதிலளித்த க்யூப்ஸ் நிறுவனம் “மார்கோ 2  பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறவில்லை. அதனால் மார்கோ 2 கண்டிப்பாக வரும். அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளது. இதனால் மார்கோ 2 கண்டிப்பாக வரும் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்