போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சமீபத்து கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மூலமாக கிருஷ்ணாவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.