அடங்கமறு இயக்குனர் & விஷால் இணையும் படம் ட்ராப்பா?

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (15:16 IST)
அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் அடங்கமறு. அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கி இருந்தார். இப்போது அவர் விஷாலை வைத்து அடுத்த ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அந்த படம் ஆரம்பிக்கப் படாமலேயே கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சில ஆண்டுகள் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்