வாடிவாசல் பணிகளை தொடங்கிய வெற்றிமாறன்!

சனி, 19 மார்ச் 2022 (16:23 IST)
வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பாலா இயக்கும் படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் சுர்யா கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையடுத்து வாடிவாசல் படம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரைவாக படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு படத்தை ரிலிஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது. இந்நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு பணிகள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் வாடிவாசல் படத்துக்கான பாடல் மெட்டமைக்கும் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்