வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனர் ஆகிறாரா கருணாஸ்?

புதன், 16 மார்ச் 2022 (16:48 IST)
நடிகர் கருணாஸ் வெற்றிமாறனின் உதவியாளராக வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசலில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வாடிவாசல் படத்தில் நடிகர் கருணாஸ் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. ஒரு பிரபல நடிகராக இருந்துகொண்டு கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாஸ் சமீபத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்