பீஸ்ட் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (14:44 IST)
பீஸ்ட் படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் தான் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏப்ரல் 14 ல்  இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கேஜிஎப் 2 படமும்  ரிலிஸ் ஆகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழலாம்.

இந்த படத்தில் இருந்து இதுவரை அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளன. இந்நிலையில் படத்தில் இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் படத்தில் வழக்கமாக 5 முதல் 6 பாடல்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்