கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஷால்…!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (16:12 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.

விஷால் நடிப்பில் சமீபமாக வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் படத்துக்கு இந்தி டப்பிங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் வண்டி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஷால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க விஷால் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்