சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பல படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்போது நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு அடுத்தடுத்து ரிலிஸ் ஆக உள்ளன. இந்நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலிஸ் ஆக இருந்த எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.