இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கிடையே அவர் குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் உள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று அறிவித்துள்ளது.