ரஜினி சார் படத்தோடு போட்டி போடவில்லை… கங்குவா ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (07:12 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “ரஜினி சாரின் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு தள்ளி வைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதனால்தான் கங்குவா படத்தை அக்டோபர் 10 ரிலீஸ் செய்கிறோம். மற்றபடி ரஜினி சார் படத்தோடு போட்டி போடவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்