இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சூர்யாவின் ‘கங்குவா’? தயாரிப்பாளர் தகவல்..!

Mahendran

செவ்வாய், 9 ஜூலை 2024 (15:47 IST)
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த படத்தை 3டி வடிவில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பத்து மொழிகளில் திரையரங்கிலும், அதன்பின்னர் ஒரூ மாதம் கழித்து முப்பது மொழிகளில் ஓடிடியில் வெளியிட இந்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஞானவேல் ராஜா ‘கங்குவா’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருப்பதாகவும் இரண்டாம் பாகத்தையும் மீதமுள்ள படப்பிடிப்பு நடத்தப்பட்டு 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே பல திரைப்படங்கள் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது ‘கங்குவா’ திரைப்படம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்