தலைவி படத்தால் என் முதுகு கடுமையாக பாதிக்கப்பட்டது… கங்கனா ரனாவாத் பெருமிதம்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (10:56 IST)
நடிகை கங்கனா ரனாவத் தலைவி படத்துக்காக உடல் எடையை ஏற்றியதால் தனது முதுகு கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த கங்கனா தலைவி படத்தில் ஜெயலலிதா போல தோற்றமளிக்க தான் 20 கிலோ வரை எடையை ஏற்றியதாக கூறினார். மேலும் இதுபற்றிக் கூறியுள்ள கங்கனா ’30 வயதுக்கும் மேல் நான் எடையைக் கூட்டியதால் எனது முதுகு கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்போது உடல் எடையை குறைத்து வருகிறேன். ஆனாலும் இன்னும் 5 கிலோ குறைய மாட்டேன் என்கிறது. இதனால் விரக்தியாக சில சமயம் இருக்கும். ஆனால் தலைவி படத்தின் காட்சிகளைப் பார்த்தால் எல்லாம் மறைந்துவிடும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்