’’பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான் !’’ ’’கமிட்டா இல்லையா’’… ரசிகர்களுக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ்

புதன், 4 நவம்பர் 2020 (19:15 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் மிஸ் இந்தியா படம் விரையில் வெளியாகவுள்ளது.

கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர், அத்துடன் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் என்பதால் இவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இந்நிலையில் இன்று அவர் தனது ரசிகர்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அதில்,ஒருவர், அக்காம் உங்களது ஃபேவரேட் கிரிக்கெட்டர் யார் ? என்று கேட்டதற்கு’’, தம்பி நம்ம #7’’ என்று பதிவிட்டு தோனியை  மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தோனி ரசிகர்கள், சென்னை கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்களது பலம் என்ன? என்ற  கேள்விக்கு , ’’நம்பிக்கையே எனது பலம்’’ என்று பதிலளித்துள்ளார்.


நீங்கள் கமிட் ஆகிவிட்டீர்களா என்ற கேள்விக்கு, நான் ’’தொழிலில் கமிட் ஆகிவிட்டேன் ’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்