’25 ஆண்டுகள் சாப்பிடவில்லை..’’.பூமிக்கு அடியில் பூஜைக்கு முயன்ற அகோரி !

புதன், 4 நவம்பர் 2020 (17:18 IST)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள மொட்டனூத்து என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மனைவி  ஜெயலட்சுமி.

இந்தத் தம்பதியர்கு அசோக் என்ற மகன் உள்ளார்.இவர் சிறு வயதிலேயே ஊரை விட்டு ஓடிச் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது காசிக்குச் சென்று அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாகவும் கூறுகிறார்கள்….

இந்நிலையில் நீண்டநாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்துள்ள அசோக்,ஒரு தோட்டத்தில் குழி தோண்டி, அதனுள் சிவன் படம் , ருத்ராட்ச மாலைகளை வைத்து தன்னை உள்ளே வைத்து மேலே சிமெண்ட் சிலாப்புகளால் மூடிவிடும்படி கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்..அசோக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது கூறிய சாமியார் அசோக், நான் 25 ஆண்டுகளாக சாப்பாடு நீர் அருந்துவதில்லை. புகைப் பிடித்தே உயிர் வாழ்கிறேன். நோய்களால் பாதுக்காக்கவே நான் பூனி பூஜையில் இறங்கியுள்ளேன். இப்போது பூமிக்குள் இறங்கி பூஜையில் ஈடுபட்டால் 9 நாட்கள் கழித்து தீபாவளிக்கு முதல் நாள் வெளியே வருவேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் இந்த இடத்திற்கு கூட்டமாகக் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்