கமலா? ரஜினியா? அரசியலில் யாருக்கு சப்போர்ட் – கவுதமி பதில்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (10:51 IST)
அரசியலில் ரஜினிக்கு சப்போர்ட் செய்வீர்களா அல்லது கமலுக்கு சப்போர்ட் செய்வீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கவுதமி. 
கமல்ஹாசனுடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கவுதமி, சில காலங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், பல விஷயங்கள்  பற்றியும் மனம் திறந்து தன்னுடைய கருத்துகளைக் கூறிவருகிறார்.
 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘ரஜினி, கமல்… அரசியலில் யாரை சப்போர்ட்  செய்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்குப் பதில் அளித்த கவுதமி, “யாருக்கு சப்போர்ட் என்பதை இதுவரை நான் முடிவு செய்யவில்லை. இதுவரை இருவருமே தங்களுடைய கொள்கைகளை முழுமையாகச் சொல்லவில்லை. இருவரும் சொன்னபிறகு, யார் பெஸ்ட் என்பதை முடிவு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்