கமலைப் பற்றி தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள் - தெறித்து ஓடிய விசு

திங்கள், 19 பிப்ரவரி 2018 (10:27 IST)
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என நடிகர் விசு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார். அதன் பின்பு மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கன்னு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து 21ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
 
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான விசு நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினியின் ஆன்மீக அரசியலை அவர் வரவேற்பதாக கூறினார். அதன் பின், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த விசு “என்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன். ஆனால், கமல்ஹாசன் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.
 
கடந்த ஆண்டு நவம்பார் மாதம் நடிகர் கமல்ஹாசன் “‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என கருத்து தெரிவித்த போது “ உங்களுக்கும் பொழுது போக வேணாமா. யாருமே இல்லை.. தனிக்கட்டை.. வயசும் ஆயாச்சு..” என கிண்டலாக விசு அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்