பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

vinoth

சனி, 28 டிசம்பர் 2024 (14:57 IST)
சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இதனால் சிம்புவின் 48 ஆவது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. இதற்கிடையில் சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சிம்பு தேசிங் பெரியசாமி படம் இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. இந்த படத்தை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே சாந்தணு நடித்த ‘இராவணக் கோட்டம்’ படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட் 170 கோடி ரூபாய் என சொன்னதாகவும், ஆனால் தயாரிப்பு நிறுவனமோ 100 கோடி ரூபாய் அளவுக்குதான் பட்ஜெட் ஒதுக்க முடியும் என சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பட்ஜெட்டை குறைக்கும் வேலையில் இயக்குனர் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்