சினிமா போன்று எழுதி நடிப்பது அரசியல் இல்லை: கமல்,ரஜினிக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவுரை

திங்கள், 19 பிப்ரவரி 2018 (08:35 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவிலும் அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் இருவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்கள் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று விருதுநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து கூறியபோது, 'சினிமா போன்று எழுதி நடிப்பது அரசியல் இல்லை என்றும், முன் அனுபவம் இல்லாமல் அரசியலில் இறங்கினால் ஏற்படும் விளைவுகளை கமல் விரைவில் அனுபவிப்பார் என்றும் கூறியுள்ளார்.
 
அரசியல் என்பது அவர்களே கதை வசனம் எழுதி அவர்களே செயல்பட வேண்டும். சினிமா போன்று இன்னொருவர் எழுதியதை வாசிக்க முடியாது. மக்களுக்கு தொண்டு செய்ய அவர்களே திட்டமிட வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும். எந்தவிதமான முன் அனுபவமும் இன்றி, முன்பலம் இன்றி அரசியல் கட்சி தொடங்கிய உடனே ஆட்சியை பிடித்துவிட முடியாது' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
ரஜினி , கமல் இருவரும் நேரடி அரசியலில் இதுவரை ஈடுபடவில்லை என்றாலும் அரசியலை பல ஆண்டுகளாக உற்று நோக்கி வருபவர்கள் என்பதும், பல தேர்தல்களில் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்து தேர்தல் முடிவையே மாற்றியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கட்யு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்