இந்த கடல்ல மீன விட ரத்தமும் கத்தியும்தான் அதிகமாக இருக்கும்.. தேவரா படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ்!

vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:10 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் 2024, ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் தற்போது முதல் பாகத்தின் அறிமுகக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையில் ஆங்கில பாடல் வரிகளோடு கடல் மற்றும் கப்பல் காட்சிகள் நிறைந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்