தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.
இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய நாகார்ஜுனா, ராஷ்மிகாவை மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு பேசினார். அதில் “இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பைப் பார்த்த போது எனக்கு “க்சண க்சணம்” படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்தது மாதிரி இருந்தது. அவர் நேஷ்னல் க்ரஷ் என்று பெயர் பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார். இந்த பாராட்டைக் கேட்ட ராஷ்மிகா வாயடைத்துப் போய் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.