இந்நிலையில் 11 குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்குவதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தத் தீர்ப்பு உள்துறை அமைச்சகம் மற்றும் குஜராத் அரசின் "தவறான செயல்களை" அம்பலப்படுத்துகிறது என்றும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் பாஜக எப்படி ஒரு பெண்ணுக்கு நீதியை மறுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது என்றும் கூறினார். பாஜகவின் "பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் உண்மை முகத்தை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது என்றும் விமர்சித்துள்ளது.
தேர்தல் ஆதாயங்களுக்காக கொலை நீதி என்ற போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது என்றும் பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கிறது என்றும் ராகுல் காந்தி மேலும் கூறினார்.