டாடா இயக்குனரின் அடுத்த படத்தில் ஜீவா!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (07:19 IST)
கவின் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் ஜீவா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தோல்விப் படங்களாகக் கொடுத்து மார்க்கெட்டில் இல்லாத ஜீவாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்