மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கவின்! நடக்கும் பேச்சுவார்த்தை!

வியாழன், 28 செப்டம்பர் 2023 (10:23 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு தற்போது தானே தயாரிக்கும் வாழை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார்.

இந்நிலையில் துருவ் விக்ரம் படத்தை முடித்த பின்னர் கவின் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்