விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

vinoth

வியாழன், 20 பிப்ரவரி 2025 (11:36 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக ஒரு வெப் சீரிஸ்க்காக இணைந்தார்கள். தொடரில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்க ஒப்பந்தமானார். இந்த தொடருக்கு டிஸ்னி நிதியளிக்க முதல் பிரதி அடிப்படையில் மணிகண்டன் தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிஸ்னி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த வெப் சீரிஸில் இருந்து மணிகண்டன் விலகினார்.

இதையடுத்து இந்த தொடரை விஜய் சேதுபதியே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் இந்த தொடருக்கு ‘முத்து என்கிற காட்டான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்