அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

vinoth

வியாழன், 20 பிப்ரவரி 2025 (14:22 IST)
நீண்ட இடைவெளுக்குப் பிறகு இந்த ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூலிலும் சுணக்கம் கண்டுள்ளது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் நடிகை சிம்ரன் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 90 களில் அஜித்துடன் சிம்ரன் நடித்த ‘வாலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்