முதல் முறையாக வில்லன் வேடத்தில் ஜீவா… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (15:47 IST)
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் ஜீவா.

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்று சொலல்ப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட் இல்லாமல் ஜீவா எந்த படமும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது வில்லன் வேடத்தை ஏற்க முடியுவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்