ஜெயம் ரவியின் சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

vinoth
திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:09 IST)
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சைரன் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது.

இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் மோசமான வசூலை பெற்று வரும் நிலையில் இந்த படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

இந்நிலையில் சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்