கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்! ‘ஜெனி’ பட -இயக்குனர் அர்ஜூனன் Jr

J.Durai

செவ்வாய், 26 மார்ச் 2024 (08:14 IST)
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர்.ஐசரி கே கணேஷ் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் மகிழ்விக்கும்படியான படைப்புகளை எப்போதும் கொடுத்து வருகிறார். 
 
இப்போது, அவர் 'ஜெனி' மூலம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்க இருப்பதை உறுதியளித்துள்ளார்.
 
ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்தின் வித்தியாசமான முதல் பார்வை இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினின் ’பிசாசு’ மற்றும் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணீயாற்றிய அர்ஜூனன் Jr. இதில் இயக்குநராக அறிமுகமாகிறார். 
 
ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அர்ஜுனன் Jr. கூறியதாவது:
 
 “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார். 
 
“குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து ’ஜெனி'  திரைப்படம் உருவாகி இருக்கிறது. 
 
மேலும், படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது என்பது அதன் முதல் பார்வையில் இருந்து தெரிகிறது. ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம்.
 
இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார். 
 
மேலும், ஜெயம் ரவிக்கு இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத முற்றிலும் புதுமையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்துடன் கூடிய அசாதாரண கதாபாத்திரம் என்பதையும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 
கீர்த்தி ஷெட்டி, கல்யாணி
பிரியதர்ஷன், தேவயானி மற்றும் வாமிகா கபி அனைவரும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர். 
 
திபுரொடக்ஷன் ஹவுஸ் இந்த படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர். 
 
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படத்தைத் தயாரிப்பில் இயக்குநர் அர்ஜுனன் Jr. படத்தை இயக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்