தசரா இயக்குனரோடு மீண்டும் கூட்டணி சேரும் நானி… கவனம் ஈர்த்த போஸ்டர்!

vinoth

திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:48 IST)
தென்னிந்திய நடிகர்களில் சிறந்த கதைக்களன்களை தேர்வு செய்து நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர்களில் ஒருவர் நானி. கடந்த ஆண்டு ரிலீஸான நானி நடித்த தசரா திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் நானி. தசரா படத்தைத் தயாரித்த சுதாகர் செருக்குராவே இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்