ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நான் வில்லனா? சென்னை 28 புகழ் நடிகர் விளக்கம் !

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:49 IST)
நடிகர் நிதின் சத்யா ஆர் ஆர் ஆர் படத்தில் வில்லனாக நடிப்பதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.

சென்னை 28, சத்தம் போடாதே ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிதின் சத்யா. அதன் பின் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த அவர் இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி தீயாய் பரவியது.

அதுகுறித்து இப்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்தி உண்மையில்லை என்றும் ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்