சுஷாந்த் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை – பீஹார் முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:34 IST)
தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் வழக்குக் குறித்து சிபிஐ விசாரணைக்கு பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தனது 34 ஆவது வயதில் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் சுஷாந்தின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் அவரது முன்னாள் காதலி கொடுத்த மன அழுத்தம் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன.

இதனால் வழக்கு விசாரணை ஒழுங்காக நடக்க வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சுஷாந்தின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுஷாந்தின் சொந்த மாநிலமான பீஹாரின் முதல்வர் நிதிஷ்குமார் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்