விசுவாசத்தில் அஜித் தோற்றம்; வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (13:49 IST)
நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு விசுவாசம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது.
இந்நிலையில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.  இந்த படத்தில் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். மேலும் அஜித் சால்ட் அண்ட் பெப்பர்  லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இந்த படத்தில் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட சென்னை பகுதியில் நடக்கும் ரவுடிகள் மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 90 சதவீதம்  படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது. அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கி தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக  கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அல்லது அனுஷ்கா தேர்வு செய்ய கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்