இசை ஞானி இளையராஜா குறித்துப் பதிவிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்திய சினிமாவில் இசை ஜாம்பாவான் இளையராஜா இன்று ( மார்ச் 18 ஆம் தேதி) சென்னையில் #RockWithRaaja என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
இதில், பிரபல இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கலந்துகொண்ட நிலையில், புலி, சச்சின், சிங்கம், புஷ்பா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட இருக்கிறேன்..என் கனவு நனவாகப் போகிறது எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு இசைஞானி இளையராஜா, உங்களை மேடையில் சந்திக்கிறேன் எனத் தெரிவித்து ஸ்மைலி எமோஜி பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் , இன்று #RockWithRaajaஇந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இசை ஞானி இளையரஜாவைச் சந்தித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இதுகுறித்து தனது டுவிட்டரில்ஒரு பதிவிட்டுள்ளார். அதில், மேஸ்ட்ரோ இளையராஜாவின் அன்பும் பாசமும் நிறைந்த இன்னொரு பக்கம் இது. இப்புகைப்படத்தை என் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The Affectionate & Loving Side of the RAJA.. Maestro Isaignani @ilaiyaraaja sirrr ❤️❤️❤️