'' தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன்''- ரஜினி பட நடிகர்

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (16:20 IST)
''தக்காளி விலை உயர்வு காரணமாக சமீப காலமாக நானும் தக்காளி சாப்பிடுவதைக் குறைந்து  கொண்டேன்’’ என்று   சுனில்ஷெட்டி கூறியுள்ளார்.

இந்தி சினிமாவின் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி. இவர் 1992 ஆம் ஆண்டு தன் 31 வயதில் பால்வானுடன் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின்னர், இந்தி சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த அவர், பெஹ்சான், மொஹ்ரா, சாஸ்த்ரா,  உள்ளிட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர், தமிழில் 12 பி படத்திலும், கடந்த 2020ல் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவர், தக்காளி விலை விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  ‘’தக்காளி விலை உயர்வு தினசரி மக்களின் தினசரி வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  நான் நடிகன் என்பதால் இது என்னைப் பாதிக்காது என நினைக்க வேண்டாம்.  இதை நாங்களும் எதிர்கொள்கிறோம். தக்காளி விலை உயர்வால் உணவின் சுவை மற்றும் தரத்திலும் சமரசம் செய்ய வேண்டியதிருக்கிறது. காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை  ஆன்லைன் மூலம் பெறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’இந்த தக்காளி விலை உயர்வு காரணமாக சமீப காலமாக நானும் தக்காளி சாப்பிடுவதைக் குறைந்து  கொண்டேன்’’ என்று   கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்