படிப்படியாக குறையும் தக்காளி விலை.. இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும்?

வெள்ளி, 14 ஜூலை 2023 (07:19 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களாக விலை 130 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ 20 ரூபாய் குறைந்து ரூ.130ல் இருந்து ரூ.110 என தக்காளி விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆனால் அதே நேரத்தில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது. தக்காளியின் வரத்து தற்போது அதிகமாக இருப்பதாகவும் எனவே தக்காளி விலை படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.200 என்றும் இஞ்சி ஒரு கிலோ ரூ.220 என்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.110 என்றும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்