தன்னிடம் கேட்காமல் தக்காளியை சமைத்த கணவர்.. கோபித்து கொண்டு சென்ற மனைவி..!

வெள்ளி, 14 ஜூலை 2023 (13:22 IST)
தன்னிடம் கேட்காமல் தனது கணவர் தக்காளியை எடுத்து சமைத்து விட்டதால் கோபித்துக் கொண்ட மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது என்றும் 150 ரூபாய்க்கு மேல் ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தக்காளியை மிகவும் குறைவாக பயன்படுத்தி இல்லத்தரசிகள் சமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மனைவி தக்காளி வாங்கி வைத்திருந்த நிலையில் அவர் தன்னை கேட்காமல் இரண்டு தக்காளிகளை எடுத்து கணவர் சமைத்து விட்டதாக தெரிகிறது. 
 
இதனால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் இது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கணவரின் புகாரை அடுத்து இது குறித்து விசாரணை செய்த போலீசார் அவரது மனைவி இருக்கும் இடத்தை கண்டறிந்து இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
தக்காளியால் கணவன் மனைவிக்குள் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் அளவுக்கு சண்டை வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்