இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

vinoth
வியாழன், 26 டிசம்பர் 2024 (12:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

இப்போது சினிமா கேரியரில் ஒரு சிறு பின்னடைவை அவர் சந்தித்து வருகிறார். சமீபகாலமாக அவரிடம் இருந்து அதிக படங்கள் வெளிவரவில்லை. வெளியான பிரதர் போன்ற படங்களும் வெற்றிகரமாக அமையவில்லை. அவர் இசையில் உருவான துருவ நட்சத்திரம் படமும் நீண்ட ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது.

இந்நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாம்வேல் நிக்கோலஸ் ஹாரிஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள ‘அய்யய்யோ’ என்ற தனியிசைப் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்