கோட் படத்தின் காட்சிகள் யுடியூபில் வெளியாகுமா?.. ஏஜிஎஸ் போட்ட ப்ளான்!

vinoth
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (08:38 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம்  ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்றாலும் வசூலில் கலக்கியது. திரையரங்குகள் மூலமாக சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருந்த போது ஓடிடியில் வெளியிடும் போது படத்தின் இயக்குனர் கட் வெர்ஷன் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்திருந்தார்.

ஆனால் திரையரங்கில் வெளியான அதே வெர்ஷன்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதுபற்றி பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு “அந்தக் காட்சிகளுக்கான கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடையவில்லை. அதனால் தியேட்டரில் வெளியான வெர்ஷன்தான் ஓடிடியில் வெளியாகும்” என வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் கோட் படத்தின் டெலிடட் காட்சிகள் விரைவில் யுடியூப் சேனல் ஒன்றில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்