வரும் டிசம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் பணத்தை மொத்தமாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவதாக இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் தொிவித்துள்ளாா்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசும், அரசு சாரா தன்னாா்வலா்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமானும் கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளாா்.
நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் காரணமாக 45 போ் உயிாிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னந்தோப்புகள் முழுவதுமாக சாய்ந்து மீளாத் துயரை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், டிசம்பா் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள எனது இசை நிகழ்ச்சியில் கிடைக்கக் கூடிய பணத்தில் குறிப்பிட்ட தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.