போலி விளம்பரம்....ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர்

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (19:29 IST)
நடிகர் சிபி சத்யராஜ் குறித்து சமூக வலைதளங்களில் பரவிவரும் ஒரு போலி விளம்பரம் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் குறித்து ஒரு போலி விளம்பரம் பரவியது. அதில், விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என்று கூறப்பட்டிருந்தது. இதற்காக மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்து மோசடி செய்ய வாய்ப்புள்ளதால் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கை இருக்கும்படி நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.

தற்போது இதேபோல் ஒரு விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

நடிகர் சத்தியராஜின் மகனும் நடிகருமானா சிபிராஜ்தனது ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், சில நாட்களாக சமூக வலைதளத்தில்  சுழன்று கொண்டிருக்கும் இப்புகைப்படம் என் கவனத்திற்கு வந்தது.  ஆனால் இதுகுறித்து எனக்குத் தெரியாது. எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை; யாரும் இதில் பாதிக்கப்படாமல் எச்சரிக்கை இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்