பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது,
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் எப்போதும் என்னுடையப் பட ரிலீஸன்று தியேட்டருக்கு சென்று முதல் நாள் காட்சியைப் பார்ப்பேன். நான் அன்று சென்றபோது போலீஸ் காரர்கள் கூட்டத்தை சரி செய்துகொண்டிருந்தனர். அதனால் போலீஸ் அனுமதி அளித்துள்ளார்கள் என்றுதான் நான் நினைத்தேன். அவர்கள் அனுமதி மறுத்தது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது ஒரு தகவல் பரிமாற்றப் பிரச்சனைதான். இதில் யாருடைய தவறும் இல்லை” எனக் கூறியுள்ளார்.