கம்பேக் கொடுக்க மார்க் ஆண்டனி 2 எடுக்க விரும்பும் விஷால்.. சம்மதிப்பாரா ஆதிக்?

vinoth

ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (10:00 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி சோலாவாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

படத்தில் விஷாலுக்கு இணையான ஸ்கிரீன் ஸ்பேஸை எஸ் ஜே சூர்யாவுக்குக் கொடுத்திருந்ததும் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து விஷாலுக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஒரு கம்பேக்காக அமைந்தது.

அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால் விஷால் நடித்த ரத்னம் படம் தோல்வி படம் தந்ததால் அவருக்கு இப்போது கம்பேக் தேவைப்படுகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என விஷால் ஆதிக் ரவிச்சந்திரனைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்