அஜித்தோடு பணியாற்ற தயார்…. வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு கருத்து!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:32 IST)
தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்து “துணிவு படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென கேட்க போகிறேன். தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1” என்று கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் தில் ராஜு. ஆனால் அப்படி பேசிவிட்டு இப்போது துணிவு படத்தையும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் துணிவு படத்தையும் ரிலீஸ் செய்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவரிடம் “அஜித் படத்தை தயாரிப்பாளர்களா” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்வ் “அஜித் சார் படத்தைத் தயாரிக்க தயார். ஆனால் அதற்கேற்ற கதை அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்