தெலுங்கு வாரிசு ரிலீஸ் தாமதம் இதுதான் காரணம்… பொய் மழைப் பொழிந்த தில் ராஜு

செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:08 IST)
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜனவரி 14 ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணமாக “தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் படங்கள் ரிலீஸ் ஆவதால் மக்கள் அந்த படங்களை பார்க்கட்டும். அதன் பின்னர் வாரசுடு திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும்” என அறிவித்துள்ளார்.

ஆனால் உண்மையான காரணம் இதுவல்ல என்று சொல்லப்படுகிறது. தெலுங்கு படத்தின் சில பணிகள் இன்னும் முடிவுபெறவில்லை என்பதால்தான் தாமதம் ஆகிறதாம். அதை மறைக்கதான் தில் ராஜு பெருந்தன்மையாக நடந்துகொள்வது போல நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்