KGF படத்தின் இந்த பாகத்தில் யாஷ் மாற்றப்படுவார்… தயாரிப்பாளர் பதில்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:15 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள KGF தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ‘KGF படத்தின் மூன்றாம் பாகம் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும். அடுத்தடுத்து வரிசையாக இந்த படத்தின் பாகங்கள் உருவாக்கப்படும். ஆறாவது பாகத்தில் யாஷ் மாற்றப்பட்டு வேறு ஹீரோ மாற்றப்படுவார். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எப்படி 5 பாகங்களுக்கு பிறகு வேறு ஹீரோவாக ஜேம்ஸ் பாண்ட்டாக நடிப்பாரோ அப்படி ராக்கி பாயாக வேறு நடிகர் தொடர்வார்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்